• Jul 02 2025

"சிக்கிட்டு பாடலைப் பார்த்ததும் மிரண்டுவிட்டோம்!" – ரஜினி பாராட்டால் குஷியில் அனிருத்!

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

'கூலி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிக்கிட்டு’ பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு மாஸ் கெட்டப்பில் பாண்டியாக மாறி பாடலுக்கு நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.


இந்த பாடலைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் அனிருத் முதன்முதலில் சிக்கிட்டு பாடலின் வீடியோவை பார்த்த போது மிரண்டுவிட்டோம். பல வருடங்களுக்கு பிறகு ரஜினி சாரை இந்த கெட்டப்பில் பார்க்கிறோம். ரஜினி சார் ஷூட்டிற்கு முன்பு எந்த பாடலையும் கேட்க மாட்டார். ஆனால், இப்பாடலின் முதல் நாள் ஷூட்டிங் முடிந்த பின்பு அவருக்கு பாடல் பிடித்ததாக சொன்னார் என உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement