• Jul 16 2025

சினிமாவில் போதைப்பொருள் பாவனை இன்று நேற்று அல்ல...!மனம் திறந்த விஜய் ஆண்டனி...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிராக பாடகராக, இசையமைப்பளராக ,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் . மேலும் இவரது படல்களுக்கு என்று தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்தின் போதைப்பொருள் பாவனை குறித்து விஜய் ஆண்டனி கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . 


தற்போது சமூக வலைத்தளங்களில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தினுடைய விடயம் தான் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது" சினிமாத்துறையில் பல நாட்களா இந்த போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் தொடர்ந்து கூறும் போது சினிமாவில் போதை பொருள் பாவனை இன்று நேற்று அல்ல பல காலமாக நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். மேலும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தின்  விசாரணை பற்றி கேள்வி எழுப்பும் போது அதற்கு விஜய் ஆண்டனி " பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் அதனால் கூறுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியிருந்தார்.மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement