• Aug 27 2025

ஸ்ரீகாந்த் பாவம்… திரையுலகத்தில் இப்டி நிறைய நடக்குது! – சீமான் கொடுத்த கிளாரிட்டி!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்படத் துறையில் சமீபகாலமாக சலசலப்பை ஏற்படுத்திய ஒரு பிரச்சனை குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கருத்தைத் தெளிவாகவும் நேரடியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சீமான் கலந்து கொண்டு பல்வேறு அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அதேவேளை, நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பான சமீபத்திய விவகாரம் குறித்த கேள்வியும் அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்காக அவர் அளித்த பதில்தான் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு போதைப்பொருள் தொடர்பான விவகாரத்தில் சிக்கினார் என கூறப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு ஊடகங்களில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே சீமான், ஸ்ரீகாந்தை தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர் எனவும், அவருக்காக வருத்தமடைவதாகவும் கூறியுள்ளார்.


மேலும், “தம்பி ஸ்ரீகாந்தை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் பாவம். ஏன்னா திரையுலகில் எனக்கு தெரிஞ்சு நிறைய பேர் இந்த விஷயத்தை பயன்படுத்துறாங்க. ஆனா அவர் மட்டும் சிக்கிட்டார். அவருக்காக நான் வருத்தப்படுறேன்.” எனத் தெரிவித்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement