• Oct 03 2025

'பிச்சைக்காரன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி..!விஜய் ஆண்டனி புது அப்டேட்...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக புகழ் பெற்ற விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக பெரிய வெற்றியை பெற்றவர். இயக்குநர் சசி இயக்கத்தில் 2016ல் வெளியான அந்த படம், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த அந்த கூட்டணி, மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு இன்றுவரை இருந்துவருகிறது.


இந்த எதிர்பார்ப்பை இனிமையாக மாற்றும் செய்தியே இப்போது வந்துள்ளது. இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைய உள்ளார். இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘நூறு சாமி’ என தலைப்பிட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


‘நூறு சாமி’ படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Vijay Antony Film Corporation மூலம் தயாரிக்கிறார். இப்படம் 2026 மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பே நக்கலானதாகவும், புதுமையானதாகவும் இருப்பதால், இதில் கூறப்படும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக மற்றும் காமெடி கலந்த சினிமாவாக இது உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement