• Nov 07 2025

மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்ட ‘கைதி’..! டீஸரை வெளியிட்ட படக்குழு...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனக்கென ஒரு இடத்தை பிடித்து மெகா ஹிட் பட்டியலில் இணைந்தது.


ஒரு இரவில் மட்டும் நடைபெறும் அதிரடியான ஆக்ஷன் த்ரில்லராக வெளியான கைதி, வசூலிலும் விமர்சனங்களிலும் வெற்றி பெற்றது. சாம் சி.எஸ். இசையமைத்த அந்தப் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்த்தியது. அதன் வெற்றியை தொடர்ந்து அவர் விஜய், கமல், ரஜினி போன்ற தலைசிறந்த நடிகர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார்.


இப்போது அந்த வெற்றி திரைப்படம் மலேசியாவில் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ரீமேக் படத்துக்கான முதல் பார்வை (First Look) மற்றும் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. மலாய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த டீஸரில், அடக்கமான கைதி கதையை எப்படி புதிதாக உருவாக்கியுள்ளனர் என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

Advertisement

Advertisement