• Nov 22 2024

ஆந்திராவில் ஒரு தளபதி விஜய்.. வேட்புமனு தாக்கலுக்கே அதிர்ந்த அரசியல்வாதிகள்..!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் காணப்படும் நடிகர்கள், நடிகைகள் ஒரு கட்டத்துக்கு மேல் அரசியலில் கால் பதிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் பிரபலமான எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் விஜயகாந்த், சீமான், தற்போது இளைய தளபதி விஜய் வரையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு மாறியுள்ளார்கள். அதேபோல நடிகை குஷ்பு, ரோஜா போன்ற முன்னணி நடிகைகளும் அரசியலில் களமிறங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் இளையதளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்து, இன்னும் ஒரு சில படங்களுடன் தான் சினிமாத் துறையில் இருந்து விலகி ஓய்வு பெறுவதாகவும், அதற்குப் பிறகு முழு நேர அரசியல்வாதியாக கடமையாற்ற  உள்ளதாகவும் கூறி தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.

மேலும் 2024 ஆண்டு நடக்கும் தேர்தல் எமது இலக்கு அல்ல 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலே நமது இலக்கு என தெரிவித்திருந்தார்.


ஆந்திரா மாநிலத்தில் எதிர்வரும் மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில், தெலுங்கு தேர்தலில் போட்டியிடும் பவன் கல்யாண், வேட்பு மனு தாக்கல் செய்ய  சென்ற போது அவரை தொடர்ந்து தொண்டர்களும் ஊர்வலமாக சென்றுள்ளார்கள். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகின்றது.


இதனால் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் உள்ளதோ அதை அளவு ரசிகர்கள் பவன் கல்யாணுக்கும் இருப்பதாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதேவேளை கடந்த முறை தேர்தலில் எட்டு முறை போட்டியிட்டு தோல்வியுற்ற பவன் கல்யாண், தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

Advertisement

Advertisement