• Jan 19 2025

அங்க கோவில்ல ரோகிணி எவ்வளவு கஷ்டப்பட்றாங்க.. அதே கோவில்ல மீனா என்ன செய்றாங்க பாருங்க..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் இன்றைய எபிசோடில் கோவிலில் பரிகாரம் என்ற பெயரில் ரோகிணி கொடுமைப்படுத்தப்பட்ட காட்சிகள் காமெடியாக இருந்த நிலையில் அதே கோவிலில் மீனா எடுத்த ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா அடிக்கடி உங்க அப்பாவிடம் இருந்து பணம் வாங்கிட்டு வா என்று ரோகிணியை டார்ச்சர் செய்து கொண்டிருந்த நிலையில் தான் அந்த பிரச்சனைகளில் இருந்து தற்காலிகமாக சமாளிக்க அப்பா ஜெயிலுக்கு போய்விட்டார் என்று ஒரு பொய்யை ரோகிணி அவிழ்த்து விட்டார். ஆனால் அந்த பொய்யே அவருக்கு எதிராக தற்போது திரும்பியுள்ள நிலையில் ’அப்பா ஜெயிலில் இருந்து வர வேண்டுமென்றால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று ரோகிணியை விஜயா பாடாய்படுத்தும் காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன.

இதை அடுத்து ஏன் தான் அப்பா குறித்து பொய் சொன்னோம் என்று ரோகிணி புலம்பும் அளவுக்கு ஆகிவிட்ட நிலையில் கோவில் காட்சிகள் காமெடியாக இருந்தது. அதே நேரத்தில் அதே கோவிலில் ஜீவா தற்செயலாக வர, பரபரப்பான காட்சிகளும் இன்றைய எபிசோடில் இருந்தது.

இந்த நிலையில் எந்த சூட்டிங் ஸ்பாட் சென்றாலும் அங்கு ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா, ரோகிணிக்கு பரிகாரம் செய்த அதே கோவிலில் ரிலீஸ் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவர் சுவாமிக்கு பத்தி காண்பிப்பது, நந்திக்கு மாலை அணிவிப்பது, பய பக்தியுடன் சாமி கும்பிடுவது, கோவில் மணியை அடிப்பது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்று இருப்பதை அடுத்து இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement