நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா தொடர்பான சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. இதற்கு காரணமாக, நயன்தாரா வெளியிட்ட அறிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை.
விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் மலர்ந்தது அனைவரும் அறிந்ததே. அவர்கள் திருமண ஆவணப்படத்திற்காக, இந்த படத்தின் சில காட்சிகளை பயன்படுத்தவேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இதற்கு தனுஷ் அனுமதி வழங்கவில்லை என்றும், எனினும் NOC (No Objection Certificate) இல்லாமலேயே அவர்கள் காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனுஷ் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.இது ஒரு புறம் நடைபெற, விக்னேஷ் சிவன் சமீபத்தில் அஜித் குமார் நடிக்க எழுதிய காமெடி கதையை தயாரிப்பாளர் நிராகரித்ததால், அந்த படம் முடக்கப்பட்டுள்ளது என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் கணக்கை நீக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.அவரது ட்விட்டர் கணக்கை நீக்கியதற்கு முக்கிய காரணமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்த விமர்சனங்கள் இருந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!