புதிதாக வைரலாகிய செய்தி ஒன்றில், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் புட்டபர்த்தியில் நடைபெற்ற சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் பேசிய கருத்துகள் தான். அவர் அதன்போது வெளிப்படுத்திய அறிவுரைகள், ஆன்மீக சிந்தனைகள் மற்றும் மனித நேயப் போதனைகள் இணையத்தில் தற்பொழுது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்த விழாவில் பல முக்கிய ஆன்மீக கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அந்த சூழலில், ஐஸ்வர்யா ராய் பகிர்ந்த கருத்துகள் தற்பொழுது மக்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் அதன்போது, " உலகில் மனிதகுலம் என்ற ஒரே சாதி தான் உள்ளது. ஒரே மதம் மட்டும் தான் உள்ளது. அது அன்பின் மதம். ஒரே கடவுள் மட்டுமே இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்." எனக் கூறியுள்ளார்.

இந்த உரை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. ஐஸ்வர்யா ராயின் இந்த சக்திவாய்ந்த வரிகள் ஆன்மீக உணர்வுகள் கொண்டவர்களை மட்டுமல்ல, பொதுமக்களையும் ஆழமாகக் கவர்ந்துள்ளது. சிலர் அவரது கருத்தை மனித நேயம் சார்ந்தது என்று பாராட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!