சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுக்கின்றார்கள். இதன் காரணத்தினால் புதிது புதிதாக வித்தியாசமான கான்செப்டில் சேனல்கள் போட்டி போட்டு மக்களை கவர்ந்து வருகின்றன.
முக்கியமாக விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவை மக்கள் மத்தியில் பிரபலமான சேனல்களாக காணப்படுகின்றன. இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும் சீரியல்களுக்கும் என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளன.
தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடத்திற்குள் வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பாகி வருவதோடு டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்த சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து அதற்கு பதிலாக புதிய கதை களத்துடன் சீரியல்களை களமிறக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக சீரியல் ஒன்று விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதை தொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி குறித்த சீரியலில் நடிகர் விராத், சிம்பு சூர்யன், சௌந்தர்யா ரெட்டி மற்றும் மன்மத ராசா பாடல் புகழ் நடிகையான சாயா சிங் ஆகியோர் இந்த சீரியலில் நடிக்க உள்ளனர். இந்த சீரியலின் மூலம் பிரபல நடிகை ஆன சாயாசிங் சின்னத்திரையில் களம் இறங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!