இனிமேல் உங்களை வைத்து படமே தயாரிக்க மாட்டேன், தயவு செய்து இந்த ஒரு படத்தை மட்டும் முடித்துக் கொடுத்து விடுங்கள் என ’விடுதலை’ படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் வெற்றிமாறனிடம் கெஞ்சி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  
சூரி கதாநாயகனாக நடிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தை தான் தயாரிக்க  தயாரிப்பாளர் எல்ரெட் குமார் முடிவு செய்திருந்தார். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஆறு முதல் ஒன்பது மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியவே 2022 டிசம்பர் மாதம் ஆனது என்பது கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் இந்த படத்தில் திடீரென விஜய் சேதுபதி இணைந்ததால் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பும் நடந்ததால் பட்ஜெட்டும் எகிறியது. முதலில் ஐந்து முதல் பத்து கோடிக்குள் இந்த படத்தை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்த நிலையில் 40 கோடி ரூபாய் வரை முதல் பாகத்திற்கு மட்டும் செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போதே இரண்டாம் பாகத்தின் பல காட்சிகள்  எடுக்கப்பட்டு விட்டதால் இரண்டாம் பாகம் மிக விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகத்தையும் கிட்டத்தட்ட ஒன்றை வருடத்திற்கு மேல் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். அது மட்டுமின்றி இன்னும் இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும் இன்னும் சில கோடிகள் வேண்டும் என்றும் வெற்றிமாறன் தயாரிப்பாளர் இடம் கேட்டிருப்பதாக தெரிகிறது. 
இதனை அடுத்து இனிமேல் உங்களை வைத்து படமே எடுக்க மாட்டேன், தயவு செய்து இந்த ஒரு படத்தை மட்டும் எனக்கு சீக்கிரம் முடித்து கொடுத்து விடுங்கள் என்று  வெற்றிமாறனிடம் தயாரிப்பாளர் கெஞ்சி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் தயாரித்த எல்ரெட் குமார் இந்த படத்தை எப்படியாவது முடித்து வாங்கி விட்டால் போதும் என்ற நிலைமையில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
                              
                             
                             
                             
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!