பிரபல பாலிவுட் மற்றும் கோலிவூட் நடிகை ஹன்சிகா மோத்வானி, ஜூலை 9-ம் தேதி மும்பையிலிருந்து நேரடியாக இலங்கைக்கு வந்தார். இந்த வருகை அவருக்குத் தனிப்பட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக இருந்தது எனத் தெரிகிறது. இலங்கைக்கு இது ஹன்சிகாவின் முதல் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கையை வந்தடைந்தவுடன் ஹன்சிகா, தாயுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள ஒரு புகழ்பெற்ற பௌத்த விகாரைக்கு சென்று, புத்தரை வழிபட்டார். இந்த தருணங்கள் படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அழகு நிகழ்ச்சிகளிலும், சர்வதேச ஆடம்பர நிகழ்வுகளிலும் தனது அடையாளத்தை ஏற்படுத்திய ஹன்சிகா, இப்போது இலங்கை வருகையால் மீண்டும் பேசப்படுகிறார். அவரது இந்த பயணம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் அவர் பங்கேற்கவுள்ள தனியார் நிகழ்வுகள் குறித்தும் தற்போது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
Listen News!