• Jul 12 2025

விஜயாவின் வார்த்தையால் உச்சகட்ட கோபத்தில் முத்து.! சகுனி ஆட்டம் ஆடும் மனோஜ்! சிறகடிக்க ஆசை

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சத்தியா மீனாவைப் பார்த்து நான் வேணும் என்றால் மாமா கிட்ட போய் பேசி பார்க்கவா என்று கேட்கிறார். அதுக்கு மீனா நீங்க யாரும் எதுவும் பண்ண வேணாம் அவரே வந்து கூப்பிடுவார் என்று சொல்லுறார். மேலும் என்ன நினைச்சு யாரும் கவலைப்படாதீங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனா தன்ர அம்மாவைப் பார்த்து தான் இப்ப வந்திருக்கேன் என்ற விஷயத்தை சீதாவுக்கு சொல்ல வேணாம் என்கிறார். 


அதனை அடுத்து ரவியும் மனோஜும் குடிச்சுக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து முத்துவும் அங்க வந்து நிக்கிறார். அப்ப முத்து நீங்க எல்லாரும் குடிக்கிறீங்க ஆனா என்ன தான் குடிகாரன் என்று சொல்லினம் என்கிறார். அதுக்கு மனோஜ் நாங்க எல்லாம் எப்பயாவது இருந்திட்டு தான் குடிப்போம் உன்ன மாதிரி daily குடிக்கிறது கிடையாது என்று சொல்லுறார்.

இதனை தொடர்ந்து மனோஜ் முத்துவை பார்த்து மீனாவுக்கு போன் எடுத்து இதை மட்டும் தான் மறைச்சியா இல்ல வேற ஏதாவது மறைச்சியா என்று கேட்கச் சொல்லுறார். பின் மீனா இதை கேட்க தான் இப்ப கால் எடுத்தீங்களா என்று கேட்கிறார். மறுநாள் காலையில முத்து மீனா வீட்டை விட்டு போனது தெரியாமல் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். 


பின் ரோகிணி எல்லாருக்கும் tea போட்டுக் கொடுக்கிறார். அதைக் குடிச்ச விஜயா ரோகிணியை பார்த்து உனக்கு பொய் சொல்ல தெரியும் ஒரு tea போட தெரியாதா என்று கேட்கிறார். இதனை அடுத்து விஜயா மீனாவை வேலைக்காரி என்று சொல்லுறதை கேட்ட முத்து ரொம்பவே கோபப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement