• Jan 19 2025

மனைவியின் 51வது பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய நெப்போலியன்... இணையத்தில் வைரலாகும் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சின்னத்தாயி, ஊர் மரியாதை, எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தென்காசி பட்டணம், விருமாண்டி என இவர் நடித்த பல வெற்றிப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.


முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். பின் ஒரு காலகட்டத்தில் நடிப்பை நிறுத்தி அரசியலில் ஈடுபட்டார். அதோடு அமெரிக்காவில் தனது குடும்பத்துடனும் செட்டில் ஆனார், அங்கு தற்போது விவசாயமும் செய்து வருகிறார்.


இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகர் நெப்போலியன் தனது மனைவியின் 51வது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் நெப்போலியன். 

இதோ அந்த வீடியோ.

 

Advertisement

Advertisement