• Jan 18 2025

நடிகையின் வீடியோ வாக்குமூலம்.. பிரபல நடிகருக்கு விதிக்கப்பட்ட தடை? சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு முடிவு

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் தற்போது தலைவராக இருக்கும்  சிவனும், பொது செயலாளராக இருக்கும் போஸ் வெங்கட்டும், கடந்த காலத்தில் பதவியிலிருந்த பலபேர் மீது நடவடிக்கை நடவ்டிக்கை எடுத்துள்ளார்கள்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போதைய நிர்வாகத்தினர் வர முன், ரவிவர்மா தலைமையிலான நிர்வாகம் தான் பதவியில் காணப்பட்டனர்.

அப்போது நடிகர், நடிகைகளை மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி  ஒன்றிற்கு அழைத்துச் செல்ல, கிட்டத்தட்ட 11 லட்சம் நிதி மோசடி  நடந்ததாக அந்த நேரத்தில் பிரச்சினைகள் எழுந்தது.


இதைத்தொடர்ந்து சிவன் தலைமையான நிர்வாகம் பொறுப்புக்கு வந்ததும், கடந்த காலத்தில் நிதி முறைகாட்டில் ஈடுபட்ட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க முன் வந்துள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்த ரவிவர்மா மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


அதன்படி, ரவிவர்மா அடுத்து வரும் மூன்று சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, சங்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள அவருக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது புதியதாக தெரிவு செய்யப்பட்ட போஸ் வெங்கட் அணியினரின் முதலாவது கூட்டத்திலையே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, ரவிவர்மா மீது பண மோசடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் மீது இன்னொரு புகார் கொடுக்கப்பட்டது.


அதாவது, ரவிவர்மா தலைவராக இருந்த போது, சீனியர் நடிகை ஒருவர் வாய்ப்பு கேட்க, அதற்கு தான் சொல்வதை செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என சர்ச்சையாக பேசியுள்ளார் ரவிவர்மா.

இவ்வாறான நிலையில், குறித்த நடிகை நடிகை புகார் ஒன்றை வீடியோவில் பேசி அனுப்ப, அந்த வீடியோவை பொதுக்குழுவில் உறுப்பினர் முன்பு ஒளிபரப்பு செய்துள்ளனர்.

இதன் காரணமாகவே ரவிவர்மா மீது நிதி மோசடியோடு சேர்ந்து இந்த புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் பிக் பாஸ் தினேஷ் உட்பட ஒரு சிலர் ரவிவர்மாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியப்படியே இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement