பிரபல நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வைரலாகி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் எந்த நட்சத்திர ஜோடியும் தராத தலைவலியை நயன்விக்கி தந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கிறார்கள். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை நயன்தாரா சினிமா துறையில் டாப்பில் இருக்கிறார். அதே போல இயக்குநர் விக்னேஷ் சிவனும் ட்ரெண்டிங் இயக்குநராக வலம் வருகிறார். இவர்கள் இருவரும் குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது பிரச்சினைகளை முன்வைத்து வருகிறார்கள். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் இவர்கள் குறித்து பேசிவருகிறார்கள்.
அதாவது "பாக்யராஜ்-பூர்ணிமா, குஷ்பூ-சுந்தர்.சி ,தனுஷ்-ஐஸ்வர்யா, ராதிகா-சரத்குமார், சினேகா-பிரஷன்னா, அஜித்-ஷாலினி ஆகிய பிரபல ஜோடிகள் தராத தலைவலியை விக்கிநயன் தந்துள்ளார்கள் என தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். விக்னேஷ்சிவன் நடிகர் பிரதீப் ஆண்டனியை வைத்து LIK என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தினை செவன்ஷ் ஷ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் பெருமளவு நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட ஷூட்டிங் மட்டும் இன்னும் முடியவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் அதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒரே தயாரிப்பு நிறுவனம் பெரிய வெற்றி கிடைக்கும் என நினைத்திருந்த நிலையில் ஷூட்டிங் நடைபெறாமல் இழுத்துக்கொண்டு இருக்கிறது. காரணம் lik படத்தின் பட்ஜெட் எகிறிக்கொண்டு போனதால் தயாரிப்பு நிறுவனம் பணம் தர மறுத்துள்ளது. இந்நிலையில் நடிகை நயனுக்கு ஷூட்டிங்கு கால் சீட் கேட்டதற்கு "பணம் இல்லன்னு சொன்னிங்க அத ரெடி பண்ணி முதலில் அந்த படத்தினை முடிங்க" என்று கூறியுள்ளார். இப்படி இருவரும் தந்த அதிர்ச்சியால் தயாரிப்பாளர்கள் செய்வதறியாது குழம்பி இருக்கிறார்கள்.
Listen News!