சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
ஏற்கனவே ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள் அனுபவித்த கொடுமைகள் எல்லாம் நீதிமன்றத்தில் முறையிட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு பிறகு வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள்.
d_i_a
இந்த நிலையில், இன்றைய நாளுக்காக எதிர்நீச்சல் ப்ரோமோவில், என் கூடவே இரு ஈஸ்வரி என்று அவரின் மாமியார் அழுது புலம்பி எமோஷனலாக பேசுகின்றார். அதற்கு சரி என ஈஸ்வரியும் தலையாட்டுகின்றார். இதைப் பார்த்த ஜனனி அதிர்ச்சி அடைகின்றார்.
இந்த விடயம் ஈஸ்வரியின் மகளுக்கும் பிடிக்கவில்லை. அதன் பின்பு எல்லாரும் ஒன்னா போய் சேர்ந்து பார்ப்போம்.. அப்படி இல்லை என்றால் ஒரு பையலும் இங்கே இருந்து வெளியே போகக்கூடாது என்று ஞானம் கதிருடன் ஆவேசமாக பேசிக் கொண்டுள்ளார்.
இன்னொரு பக்கம் அவங்க மூலமா தான் அண்ணனை வெளியே கொண்டு வரலாம் என்று இப்படி பண்ணிக் கொண்டிருக்கிறாயா? என ஆதிரை தனது அம்மாவுக்கு திட்டுகின்றார். இதுதான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ.
Listen News!