தமிழ் சினிமாவுக்கு பல கருத்துள்ள படங்களை வழங்கியவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் இறுதியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. மேலும் இவருடைய தயாரிப்பில் 'பேட் கேர்ள்' திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில், விடுதலை 2 படத்திற்காக வெற்றிமாறனுக்கு 'Caib Award' விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்போது வெற்றிமாறன் விருது விழாவில் பேசிய விடயங்கள் தற்போது வைரல் ஆகியுள்ளது.
அதன்படி அவர் கூறுகையில், விடுதலை படம் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. என்னை ஒரு பெட்டர் ஆன பர்சன் ஆக மாற்றுவதற்கு முக்கிய காரணமாக விடுதலை படம் அமைந்தது .
ஒரு படத்தை தொடங்கும் போதும் முடிக்கும் போது ஒன்றை புதிதாக கற்றுக் கொள்வது எப்போது நடக்கும். அதை இந்த படத்துல நடந்திருக்கு நான் ஒரு இடத்தில் இருக்கிறதை உணர்த்தியது விடுதலை படம் தான்.
மேலும் இந்த படத்தின் மூலம் என்னுடைய பிஸிக்கல், மெண்டல் ரீதியாகவும் நிறைய விஷயங்கள் எல்லாம் சேர்த்து ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா கத்துக்கிட்டேன். இதுக்கப்புறம் இன்னொரு படம் இந்த மாதிரி பண்ண முடியுமா?அமையுமா? என தெரியாது என தெரிவித்துள்ளார்.
Listen News!