மகிழ் திருமேனி - அஜித் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் திகதி வெளியானது. 2 ஆண்டுகள் கழித்து அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் காணப்பட்டது..
அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் முதல் நாளிலேயே இதன் வசூல் 62 கோடிகளை எட்டி இருந்தது. இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் படக்குழுவினருக்கும் நிம்மதியை கொடுத்தது.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் வாரத்திற்கான மொத்த கலெக்சன் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விடாமுயற்சி திரைப்படம் முதல் வாரத்திலேயே 160 கோடிகளை வசூலித்து உள்ளதாம். ஆனாலும் இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை.
முதல் வாரத்திலேயே 160 கோடிகளை வசூலித்த விடாமுயற்சி திரைப்படம் அதன் இரண்டாவது வாரத்தில் 200 கோடிகள் கடந்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் காருக்குள் நடத்திய அதிரடி சண்டை காட்சிகள் இணையத்தில் கடும் வைரலானது.
இதே வேளை இந்த திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை எனவும், விடாமுயற்சி ஒரு கசப்பான அனுபவம், வசூலிலும் பெரிதளவில் இலாபம் ஈட்ட வில்லை, இதை விவேகம் 2 என்று அழைப்பதா என தெரியவில்லை எனவும் தியேட்டர் ஓனரான ஸ்ரீதர் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!