• Jul 21 2025

வடசென்னை 2 உறுதி.! ஆனா ஹீரோ சிம்பு இல்ல... இயக்குநர் வெற்றி மாறன் ஓபன்டாக்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கியமான சமூக உணர்வுள்ள இயக்குநர்களில் ஒருவர் வெற்றி மாறன். பல வெற்றிப் படங்களை இயக்கி, ரசிகர்களிடையே தனிச்சிறப்பை பெற்றவர். இவரது படங்கள் சமூக சிந்தனையுடன் கூடிய வெறித்தனமான காட்சிப்பதிவுகளால் புகழ் பெற்றவை.


இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், வெற்றிமாறன் ஒரு முக்கியமான தகவலைக் கூறியுள்ளார். தனது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அடுத்த படம் சிம்புவுடன் தான் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


அந்த நேர்காணலின் போது வெற்றி மாறன், "என்னுடைய அடுத்த படம் சிம்புடன் தான். இதற்கும் வடசென்னை படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்ல. ஆனால் இரண்டு படங்களும் ஒரே காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும்." எனக் கூறினார். இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement