சண்டைக்கோழி, ரன், ஆனந்தம் என வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்த லிங்குசாமிக்கு, சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் திரைப்படம் தோல்வியை கொடுத்தது. அதற்குப் பிறகு இன்னும் ஒரு ஹிட் படத்தை இதுவரையில் அவரால் கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில், அஞ்சான் படம் நாளை ரீ ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது இதுதொடர்பில் பேட்டியளித்த லிங்கசாமி ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், அஞ்சான் படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பத்து வருஷத்தில் நிறைய பேர் என்னிடம் எனக்கு அஞ்சான் படம் பிடிக்கும் சார் என்று சொல்லி இருக்கின்றார்கள்.
அதேபோல சூர்யாவின் ரசிகர்களுக்கும் அந்தப் படம் கனெக்ட் ஆகி இருந்தது. நான் என்னவெல்லாம் நினைத்து செய்தனோ, அதெல்லாம் அவர்களுக்கு கனெக்ட் ஆகி இருக்கிறதே என்று தோன்றும். அதே மாதிரி நிறைய குட்டி பசங்களுக்கு படம் பிடிச்சிருக்கு என்று அவங்களுடைய பெற்றோர்கள் சொல்லுவார்கள்.

கேரளா, மும்பையில் எல்லாம் அஞ்சான் படம் நன்றாக போனது. எனவே தான் சில மைனஸ்களை சரி செய்து ரீ ரிலிஸ் செய்யவுள்ளோம். இந்த ரீ ரிலீஸ் எங்களது சந்தோஷத்திற்காகவும், சூர்யா மீது இருக்கும் மரியாதைக்காகவும், அவருடைய ரசிகர்களுக்காகவும் தான் .
தொடர் வெற்றி கூட ஒரு சிலருக்கு கோபம், பொறாமையை ஏற்படுத்தும். அந்தக் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் சில விஷயங்கள் நடக்கும். அந்த நேரம் தான் சோசியல் மீடியா வளர்ந்த நேரம். அதில் அடிவாங்கியதில் நாம தான் பஸ்ட், அப்படி எல்லோரும் பேசியது என்னை மூன்று மாதம் வரை ரொம்பவே பாதித்தது என்றார்.
Listen News!