• Nov 28 2025

2வது திருமணம் செய்துகொண்ட வாரிசு நடிகை..! வைரல் போட்டோஸ்

Aathira / 11 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான  பிக் பாஸ் நிகழ்ச்சியின்  4வது சீசனில் பங்கு பற்றி மிகப்பெரிய அடையாளம் பெற்றவர் நடிகை சம்யுக்தா. அவர் ஒரு சில திரைப்படங்களிலும் சீரியல் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. 

சம்யுக்தாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி மகன் ஒருவரும் உள்ளார். ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதற்குப் பிறகு தனது மகனை சிங்கிள் பேரண்டாக வளர்த்து வந்துள்ளார்.  பிக் பாஸில் இருக்கும்போது இவர் தனது  மகனைப் பற்றி பேசி பலரது அன்பையும் பெற்றார்.

மேலும் தான் கர்ப்பமாக இருக்கும் போது அவருடைய கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றதாகவும், அந்த நேரத்தில் அங்கு ஒரு பெண்ணோடு வாழ்ந்து வருவதாக வீடியோ காலில் சம்யுக்தாவிடம் சொன்னதாகவும் அவர்  பல பேட்டிகளில் கண் கலங்கி பேசியிருந்தார். 


அதற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான  சந்திரகுமாரி என்ற சீரியல் நடித்து  பிரபலம் ஆனார்.  பிறகு சினிமாக்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்தார். இவருடைய தன்னம்பிக்கையும், மன உறுதியும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

இந்த நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார் சம்யுக்தா. தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன. 

Advertisement

Advertisement