மாதம்பட்டி ரங்கராஜின் திருமண விவகாரத்தை காவல் நிலையம் வரை கொண்டு சென்ற ஜாய் கிரிஸில்டாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்காக என்றாலும் மாதம்பட்டி ரங்கராஜ் கண்டிப்பாக இறங்கி வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அந்த குழந்தை என்னுடையது தான் என்று டிஎன்ஏ டெஸ்டில் உறுதியாகினால் மட்டுமே அதற்கான பொறுப்பை ஏற்பேன் என்று கூறினார்.
எனினும் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு ரங்கராஜ் இதுவரை வரவில்லை. அவருடைய பக்கத்தில் உண்மை இருந்தால் உடனடியாக அந்த டெஸ்ட்டை எடுத்து தன்னை நிரூபிக்க வேண்டியது தானே என்று பலரும் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜாய் கிரிஸில்டாவும் தொடர்ச்சியாக, அவரைக் கண்டால் வரச் சொல்லுங்க என்று பதிவுகளை பதிவிட்டு வருகின்றார். ஆனாலும் ரங்கராஜ் எந்த சலனமும் இல்லாமல் சைலன்ட் மூட்டுக்கு போய்விட்டார்.

இன்னொரு பக்கம், மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனத்தை பற்றி பேசியதாக ஜாய் கிரிஸில்டாவின் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்க கூறி ரங்கராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கான விசாரணை நேற்று நடைபெற்ற போது அதற்கெல்லாம் தடை விதிக்க முடியாது என வழக்கை தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி.

இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வழக்கம் போலவே, பொண்டாட்டி ஐ லவ் யூ... எனக்கு நீ கடவுள் கொடுத்த கிப்ட் ... கடைசி வரை நல்லா பாத்துக்கோ... கிளம்பிட்டேன்... பெல்ட் போட்டுட்டேன் என்று வயிற்றை தூக்கி காட்டியபடி சொல்கிறார்..

மேலும் நீ வந்த பிறகு தான் நான் எனர்ஜியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றேன்.. இன்னைக்கு ஃபுல் டே ஆஃபீஸ் தான்... மிஸ் யூ என்று சொல்லி முத்தமும் கொடுக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
அத்துடன், தைரியம் இருந்தால் வெளியே வாங்க.. நீங்க மகனின் அக்கவுண்டை வேண்டும் என்றால் நீக்கலாம்.. ஆனால் அவனுக்கு தந்தை என்பதை நீக்க முடியாது.. எனக்கும் என்னுடைய மகனுக்கும் ஏதாவது ஆனால் ரங்கராஜ் தான் பொறுப்பு .. எனது உயிருக்கும் ராகா ரங்கராஜ் உயிருக்கும் மாதம்பட்டி தான் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!