90 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சீதா. இவர் தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
வெள்ளித் திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை, சீரியல், வெப் சீரிஸ் என அனைத்திலும் காலத்திற்கு தகுந்தபோல தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
1985 ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், ஆயிரம் பூக்கள் மலரட்டும், துளசி, குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் பார்த்திபன் இயக்கிய நடித்த பொண்ணு பார்க்க போறேன், மனசுக்கேத்த மகராசா, ராஜநடை, புதிய பாதை, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, தங்கைக்கு ஒரு தாலாட்டு ஆகிய படங்களிலும் நடித்தார்.
அத்துடன் காதல் அழிவதில்லை, மதுர, வியாபாரம் ஆகிய படங்களில் தாய் கேரக்டர்களின் நடித்தார். இறுதியாக ரவி மோகன் நடிப்பில் வெளியான பிரதர் மற்றும் அக்கேனம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

1990 ஆம் ஆண்டு பார்த்திபனை திருமணம் செய்தார் நடிகர் சீதா. ஆனாலும் அடுத்த ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்பு 2010 ஆம் ஆண்டு சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. தற்போது தனியாக வசித்து வருகின்றார் சீதா. '

இந்த நிலையில், நடிகை சீதாவின் அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்த சீதா, தற்போது ஜீன்ஸ், சேர்ட்டில் 2k கிட்ஸ்க்கு ஏற்றவாறு தனது அடையாளத்தை மாற்றியுள்ளார்.
Listen News!