இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாகவும், கீர்த்தி சனோன் கதாநாயகியாகவும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் தான் தேரே இஷ்க் மெய்ன். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் முதல் முறையாக இணையும் இந்த படத்தில் இவர்களுடைய ஜோடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கீர்த்தி சனோன் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியாகும் முதல் படமாக தேரே இஷ்க் மெய்ன் படம் காணப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படத்தின் முதல் விமர்சனமே உணர்ச்சிபூர்வமாக காணப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் சிறந்த காதல் கதை என்றும், பலமுறை சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இந்த படத்தில் நிறைந்துள்ளதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வாரணாசியில் நடிகர் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதில் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் கதாநாயகி கீர்த்தி சனோனும் காணப்படுகின்றார். இவர்களது ஜோடி பார்க்க ஜோராக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றனர்.
Listen News!