சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சிந்தாமணி ஹாஸ்பிடலுக்கு வந்து ரேகாவை வீட்டிற்கு வருமாறு அழைக்கின்றார். ஆனாலும் அவருக்கு உன்னுடைய வேலை பிடிக்கவில்லை, அதனால் நான் அப்பா கூடவே இருக்கின்றேன் என்று சொல்லுகின்றார் .
அதன் பின்பு மீனா வீட்டிற்கு வந்த முத்து, ஐயப்பனுக்கு மாலை போட்டதாகவும், கார் செட்டில் பூஜை வைத்திருப்பதாகவும் குடும்பத்தோடு வருமாறும் அழைக்கின்றார்.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த அண்ணாமலை, மீனாவிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறுகின்றார். மேலும் முத்து குடிப்பதற்காக மட்டும் நீ வீட்டை விட்டு வரவில்லை, வேறு ஏதோ காரணம் இருக்கு. உன்னுடைய அப்பாவாக நினைத்தால் சொல்லு என்று சொல்ல, அவர் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்தால் அவர் உயிருடன் இருக்க மாட்டார் என்று நினைத்து அவர் குடிப்பது மட்டும் தான் காரணம் அவரை திருத்த வேண்டும் என்று சொல்லுகின்றார்.

அந்த நேரத்தில் ரோகிணி கால் பண்ணி, உங்களுடன் தனியாக பேச வேண்டும் என்று அழைக்க, அங்கு சென்ற மீனாவிடம் , நீங்க உங்க அம்மா கிட்ட உண்மைய சொன்னீங்களா? என்று கேட்கின்றார் ரோகிணி. இதனால் கோபப்பட்டு திட்டிய மீனா, நீ இப்பவும் உன்னை பற்றி சுயநலமாக தான் யோசிக்கிறாய் .
நீ எப்போது உண்மையை சொல்லப் போகின்றாய் என்று கேட்க, மனோஜ் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்த பிறகு கட்டாயம் சொல்லுவேன் என்று சொல்லிச் செல்கிறார்.
இவர்கள் இருவரும் வெளியில் வரும்போது ஆட்டோவில் இருந்து விஜயா அவர்களை பார்த்து விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!