• Jul 21 2025

மீண்டும் டி.இமான் இணைந்த பாடகர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...!யார் தெரியமா?

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா இசை உலகத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி பாடகரும், மனதைக் கொள்ளை கொள்ளும் குரல் வளமை கொண்டவருமான சித் ஸ்ரீராம், சில காலமாக திரைபாடல்களில் இருந்து ஓரமாக இருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் திரும்பவிருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சித் ஸ்ரீராம் மற்றும் டி.இமான் இருவரும் இதற்கு முன்னர் மிகக் குறைவான படங்களில் மட்டுமே இணைந்துள்ளனர். ஆனால் தற்போது இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என்ற செய்தி, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. இது சாதாரண கூட்டணி அல்ல உணர்வு ஆழமுள்ள பாடல்களுக்குத் தேவையான குரலும், இசையின் வித்தைகள் அனைத்தும் தெரிந்த ஒரு இசையமைப்பாளரும் ஒரே பாட்டில் இணையப்போகிறார்கள் என்பது தான் முக்கியம்.  ஒரு புதிய சிங்கிள் பாடல் அல்லது திரைப்பட பாடல் வெளியிடவிருக்கிறார்கள் எனத் தகவல்கள் இசை ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்த கூட்டணியில் எந்த வகை பாடல் வரும் என்பது தற்போதைக்கு தெரியவில்லை. ஆனால் மெல்லிசை, காதல் உணர்வுகளை மையமாக கொண்ட பாடல் ஆக இருக்கலாம். மற்றொரு தகவலின்படி, இது ஒரு மேட்டல் அல்லது டெம்போ பாட்டாக இருக்கக்கூடும் எனவும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர. சித்தின் குரல் மென்மையும், இமான் இசையின் வியத்தகு வண்ணங்களும் இணைந்தால், இது மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்றாக மாறும் என்பதில் ஐயமில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் . 


மேலும் தமிழ் சினிமாவில் இசை என்பது ஒரு உணர்வின் வெளிப்பாடு. அந்த உணர்வை உருவாக்கும் முக்கியமான காரணிகள் பாடகரும், இசையமைப்பாளரும் தான். இப்போது, இந்த இரண்டு முக்கியமான இசை கலைஞர்கள் மீண்டும் இணைகிறார்கள் என்பது ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் சினிமா இசைக்கு ஒரு புதிய அத்தியாயமாக இருக்கலாம். இந்த புதிய பாடல் அல்லது சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களின் காதுகளில் மழையை கொட்டும் பாட்டு ஆகவோ அல்லது நெஞ்சை உருக்கும் மெலோடி ஆகவோ இருக்கும். இரண்டிலும் இருந்தாலும், அது ரசிகர்கள் மனதில் நீண்ட நாட்கள் நிலைக்கும்.

Advertisement

Advertisement