• Aug 23 2025

சூப்பர் ஸ்டார்களின் சாதனையை சாதித்த ஊர்வசி.. இத்தனை விருதுகளா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தனது 14 வயதிலேயே திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் தான் ஊர்வசி. அதன்பின் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபல நடிகை ஆக வலம் வந்தார். முந்தானை முடிச்சு படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அவருக்கு முன்னணி நடிகையாக வருவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு சில படங்களில் இரண்டாவது நாயகியாகவே நடித்தார். ஆனால் மலையாள சினிமாவில் தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டார். தொடர்ந்தும் அசைக்க முடியாத பல வெற்றி படங்களில் நடித்தார். மலையாள சினிமாவில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டருடன் ஜோடி போட்டு அசத்தி இருப்பார்.


தமிழ் சினிமாவில் ஊர்வசி நடிப்பதை விட மலையாளத்தில் நடிப்பது தான் அத்தனை தத்துரூபமாக காணப்படும். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளோழுக்கு என்ற  மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு கேரளா தேசிய விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐந்து விருதுகளை வாங்கிய ஊர்வசி தற்போது ஆறாவது முறையாக விருது பெற்று  மம்முட்டி, மோகன்லால் எண்ணிக்கை சமம் செய்துள்ளார்.

Advertisement

Advertisement