• Jan 19 2025

சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார் பிரித்திவிராஜ்!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

1954ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகின்றது.

எழுபதாவது தேசிய திரைப்பட விருது விழா இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் படங்களில் பொன்னின் செல்வன், திருச்சிற்றம்பலம் ஆகிய பாடங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.

பிராந்திய மொழிப் படங்கள் பிரிவில் சிறந்த தெலுங்கு படமாக கார்த்திகேயா 2 விருது வென்றுள்ளது. சந்து மொண்டேடி இயக்கத்தில் சித்தார்த், அனுபமா பரமேஸ்வரன் ஜோடி நடித்த இப்படம் 2022 இல் வெளியாகி பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.


இந்த நிலையில், ஆடு ஜீவிதம் படத்திற்காக இந்த ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகளில் பிரித்திவிராஜ்க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, பிரபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பலர் நடிப்பில் வந்த பொன்னியின் செல்வன் -1 நான்கு விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement