பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ளது. இந்த சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த சீசன் வெறுப்பை சம்பாதித்தாலும் தற்போது சூடு பிடித்துள்ளது.
இந்த சீசனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இயக்குனர் பிரவீன் காந்தி, சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன், இன்ஸ்டா பிரபலங்களான ரம்யா ஜோ மற்றும் சுபிக்ஷா, துஷார் , கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

இதில் இயக்குநர் பிரவீன் காந்தி மற்றும் நந்தினி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு திவாகர் நுழையும்போது அவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் தற்போது அவர் மக்களால் காப்பாற்றப்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில், இந்த வாரத்திற்கான வோட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் கெமி இறுதி இடத்தில் காணப்படுகிறார். இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே திவாகருடன் நடந்த சண்டையில் தனது இடுப்பை திவாகர் பார்ப்பதாக கெமி குற்றம் சாட்டி இருந்தார். இது ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.
கடந்த சீசனிலும் பிரதீப் மீது மாயா, பூர்ணிமா ஆகியோர் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து தான் அவருக்கு ரெட்காட் கொடுத்து வெளியே அனுப்பினார்கள்.
அதனாலயே கெமி, திவாகர் மீது குற்றம் சாட்டியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இந்த வாரம் கெமி வெளியேறுவாரா? இல்லையா? மக்களால் பாதுகாக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!