• Jan 19 2025

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்..!! பிரபல ஹீரோவுடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் தீபக் ஹீரோவாகவும், நக்ஷத்திரா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். 

இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட மேக்னா என்ற  கதாபாத்திரம், கதையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்து இருந்தது. 

அதில் மேக்னா கேரக்டரை ஏற்று நடித்தவர் தான் நடிகை அக்ஷிதா. இவர் கர்நாட மாநிலத்தைச் சேர்ந்தவர். கன்னட மொழி சீரியலில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அழகு' சீரியல் தான் தமிழில் இவர் நடித்த முதலாவது சீரியல். இதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான 'கண்ணான கண்ணே' என்ற சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.


அதன் பின்னரே விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சீதா ராம்' சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை அக்ஷிதாவுக்கும், பெங்களூரை சேர்ந்த எக்சிகியூடிவ் புரடியூசர் மற்றும் நடிகர் ப்ரீதம் சுரேஷ் என்பவருக்கும் வெகு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களது திருமண நிச்சயதார்த்தத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement