சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியலில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை மான்யா ஆனந்த். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகள் சந்திக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை பற்றி பேசி இருந்தார்.
அதன்படி தனுஷ் படத்தில் நடிப்பதற்கு அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என அவருடைய மேனேஜர் ஸ்ரேயாஸ் கூறியதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகை மான்யா ஆனந்த் தான் அளித்த பேட்டியில் ஒரு பகுதி மட்டுமே வைரலாகி வருகின்றது. அதனை முழுமையாக பாருங்கள் என்று விளக்கம் கூறி அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், நான் முதலில் அளித்த பேட்டியை முழுமையாக பாருங்கள். தனுஷ் மேனேஜர் பெயரை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் அப்படி செய்து இருக்கலாம் என்றுதான் கூறினேன்.

அந்த போன் நம்பரை தனுஷ் சாரின் டீமுக்கு அனுப்பி அது யார் என்ற விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறி இருக்கின்றேன். ஆனால் பேட்டியை முழுவதுமாக பார்க்காமல் இது பற்றி பொய்யான செய்தியை பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது மான்யா ஆனந்த் வெளியிட்ட அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, ஒரு நிமிஷத்துல தனுஷை தப்பா நினைச்சுட்டோமே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!