பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் இந்த விவகாரம் தொடர்பிலான கருத்துக்களையும் விவாதங்களையும் ஒருசில பிரபலங்கள் முன்வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நிலையில், இரண்டாவதாக ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்கு பிறகு அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார்.
இதை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அதற்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்குமாறும் அதில் அது தனது குழந்தை என்று உறுதியானால் மட்டுமே தான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வேன் என்றும் ரங்கராஜ் தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரபல யூடியூபர் ஒருவர் ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி தெரிவிக்கையில், ரங்கராஜ் உண்மையாகவே ஒரு சபல பேர்வழி. ஜாய்க்கும் பணம் மீதுதான் ஆசை என்று தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
மேலும், ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர் இன்னோரு பெண்ணிடம் சென்றது பாசத்திற்காகவோ காதலுக்காகவோ அல்ல. காமத்திற்காக மட்டுமே.. ஆனால் ஜாய் கிரிசில்டாவுக்கு காதலும் கிடையாது காமமும் கிடையாது அவருக்கு பணம் தான் நோக்கம். அது தான் இப்போ வீடு, பங்களா, கார் என்று வந்து நிக்குது .

ரங்கராஜ்க்கு மனைவியைத் தாண்டி இன்னொரு பெண்ணுடன் உறவு தேவைப்பட்டது. அதான் வச்சுகிட்டாரு. இதற்கு இடையில் கணவன் மனைவி பந்தம் என்று ஒன்றும் கிடையாது. அதை கேவலப்படுத்தாதீங்க என்றார்.
Listen News!