• Jan 19 2025

விவாகரத்து கிடைக்க இருந்த நேரத்தில் திடீரென சமரசம்: மனைவியுடன் வாழ ‘பேட்ட’ நடிகர் சம்மதம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் நடித்த நடிகர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்து இருந்தார். அவருக்கு விவாகரத்து கிடைக்க இருந்த நேரத்தில் திடீரென அவர் தனது மனைவியுடன் சமரசமாகி மீண்டும் வாழ ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தனது மனைவி ஆலியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு செய்த விவாகரத்து விண்ணப்பம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரிரு நாளில்  விவாகரத்து கிடைத்துவிடும் என்ற நிலை இருந்தது.



இந்த நிலையில் திடீரென சமீபத்தில் துபாயில் வசித்து வந்த தனது மனைவி ஆலியாவை நவாசுதீன் சித்திக் பார்க்க சென்றதாகவும் அங்கே இருவரும் மனம் விட்டு பேசியதில் சமரசம் ஆனதாகவும் தெரிகிறது. இதையடுத்து இருவரும் 14 வது திருமண நாளை துபாயில் குழந்தைகளுடன் கொண்டாடிய நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது 

 இது குறித்து ஆலியா அளித்த பேட்டியில் ’எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சில நபர்கள் தான் காரணம் என்றும், தவறான புரிதல்கள் காரணமாக பிரச்சனை ஏற்பட்டது என்றும், இனிமேல் எங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் குழந்தைகளுக்காக நாங்கள் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம் என்றும் நடந்ததை ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டு வருங்காலத்தை நாங்கள் இனிமையான எதிர்கொள்ள  இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement