பாலிவுட் உலகில் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷர்தா கபூர், தற்போது தமிழ் திரைப்படத்துறையில் தனது அறிமுகத்தைச் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல பெரும் நட்சத்திரங்களை இணைத்து திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி, தனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதியை கதாநாயகனாக தேர்வு செய்துள்ளதாகவும், அதில் நாயகியாக ஷர்தா கபூர் இணைவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இத்தகவல் இந்திய சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் பன்மொழித் திறனுடைய நடிகர்கள் அதிகரித்து வரும் சூழலில், ஹிந்தி திரைப்படங்களில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் ஷர்தா கபூரின் தமிழ் அறிமுகம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குநர் மகிழ்திருமேனியின் மேக்கிங், கதைத் தேர்வு, மற்றும் படங்களின் காட்சிப்படுத்துகை எப்போதுமே சிறப்பாகக் கருதப்படுகின்றன. அத்துடன், வலுவான நடிப்பினால் மக்கள் மத்தியில் சிறப்பான இடத்தினைப் பிடித்துள்ள விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஷர்தா கபூர் நடித்தால், அது தமிழ் திரையுலகில் முக்கியமான கூட்டணி ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மகிழ்திருமேனி- விஜய் சேதுபதி இணைப்பில் எப்படியான கதை உருவாகும் என்ற கேள்வி தற்பொழுது ரசிகர்களிடையே உருவாகி வருகிறது. அதற்கு இணையாக, ஷர்தா கபூர் சேரும் தகவல் படம் குறித்த புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!