• Jan 19 2025

TTF வாசன் குப்பை மனுஷன்.. என்ன பத்தி பேசியே 3 லட்சம் சம்பாதிச்சிட்டான்! செம்அம் ஆவேசம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் காணப்படும் யூட்யூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் ஆகிய ஆப்ஸ்கள் மூலம் தமது திறமையை வெளிக்காட்டி இன்று எத்தனையோ பேர் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் இப்படி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகவும் ஆக்டிவ் ஆகவும் காணப்படுபவருக்கு பிக் பாஸ் வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

அந்த வகையில் யூடியூபில் அதிகளவான இளம் ரசிகர்களை கொண்டவர் தான் டிடிஎஃப் வாசன். இவர் பைக் ஓடிக்கொண்டே வீடியோ எடுத்து வெளியிட்டு பிரபலமானார். இவர் பைக்கோடும் ஸ்டைலை பார்த்து பலரும் இவருக்கு ரசிகர்களாக ஆனார்கள். ஆனாலும் அடிக்கடி இவர் போலீஸ் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.

இதை தொடர்ந்து டிடிஎஃப் வாசன் ஹீரோவாக அறிமுகமாக போகிறார் என்றும் அந்தப் படத்தை இயக்குனர் செம்அம்  இயக்குகின்றார் என்றும் மஞ்சள் வீரன் படம் பற்றிய தகவல்கள் அதிரடியாக வெளியானது. இதனால் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக போகின்றார் என்று பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.


எனினும் சமீபத்தில் இதன் இயக்குனர் டிடிஎஃப் வாசனை இந்த படத்தில் இருந்து நீக்கியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார். அவர் படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக ஒத்துழைக்காத காரணத்தினாலேயே அவரை படத்திலிருந்து தூக்கியதாக சொல்லி இருந்தார். ஆனாலும் அதற்கு பின்பு வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசன் படப்பிடிப்பே நடைபெறவில்லை. வெறும்  ஃபோட்டோ ஷுட் தான் நடந்தது என்று இயக்குனர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்தை இயக்கிய செம்அம்  டிடிஎஃப் வாசன் பற்றி கூறுகையில், டிடிஎஃப் வாசன் ஒரு குப்பை. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டான். பெத்த அம்மாவையே புழல் சிறையில் முன்னாடி நிக்க வச்சவன். இவன் டோட்டலா வேஸ்ட். சரியான குப்பை மனுஷன். ஒரு தடவ தப்பு பண்ணலாம் ஆனால் வாழ்நாள் பூராவே தப்பு பண்ண கூடாது. பைக் ஓட்டி இளைஞர்களை கெடுக்கிறத நிறுத்தனும். என்ன பத்தி வீடியோ போட்டு அதிலேயே மூன்று லட்சம் சம்பாதிச்சு என்னோட உழைப்பை சாப்பிட்டு இருக்கான் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement