• Jan 18 2025

என்னை போல யாரும் ஏமாறாதீங்க.. ரவீந்தர் முகத்திரையை நார்னராக கிழித்த பாலாஜி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8-ல் பங்கு பற்றிய போட்டியாளர்கள் பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்கிய நபர்களாகவே காணப்படுகின்றார்கள். அதன்படி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் தான் ரவீந்தர், விவாகரத்து பிரச்சனையில் சிக்கியவர் அரண்வ், அவருடைய காதலியாக கூறப்பட்டவரும் இந்த சீசனில் தான் பங்கு பற்றியுள்ளார். மேலும் கவுண்டம்பாளையம் படத்தை எடுத்து பிரச்சினையில் சிக்கியதோடு காதல் திருமணம் பற்றி பூகம்பத்தை ஏற்படுத்தியவர் தான் ரஞ்சித்.

இந்த நிலையில், ரவீந்தர் தன்னை ஏமாற்றி விட்டதாக பிக் பாஸ் பிரபலம் பாலா குற்றம் சாட்டியுள்ளார். அதாவது என்னை வைத்து படம் பண்ணுகின்றேன் என ஒன்றரை வருடத்தை வீணடித்து விட்டார் ரவீந்தர் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.


மேலும் அவர் கூறுகையில், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை வைத்து ரவீந்தர் சொன்ன கதை தன்னை வைத்து அவர் படமெடுக்க போவதாக அறிவித்த மார்க்கண்டேயனுக்கும் மகளிர் கல்லூரியும் என்ற படத்தின் கதை. என்னோட 1.5 வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்க. இப்ப பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை அடிமைகளாக மாற்ற இப்படி உருட்டலாமா என பாலாஜி முருகதாஸ் ட்வீட் போட்டு பேட்டியிலும் ரவீந்தரின் முகத்திரையை கிழித்துள்ளார்.

மேலும் அந்த படத்தில் நடிக்க எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அதற்குப் பிறகு ஆளயே காணோம். என்ன பொறுமையா வெயிட் பண்ண சொல்லி ஒன்றரை வருடத்தை வீணாக்கினார். அலுவலகத்துக்கு சென்றாலும் அவர் இல்லை. இப்போ பிக் பாஸ் வீட்டுக்குள்ள தான் பெரிய தயாரிப்பாளர் என்று தன்னிடம் கதை உள்ளது என்றும் அருணை பிரைன் வாஷ் செய்து ஏமாற்றுவது அவரது போலித்தனத்தையே காட்டுகின்றது. என்னை போல யாரும் ஏமாற வேண்டாம் என அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement