• Jan 18 2025

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிகொடுத்த நயன்தாரா? த்ரிஷாவின் சம்பளம் இத்தனை கோடியா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பெருமையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நயன்தாரா தற்போது த்ரிஷாவிடம் அந்த பட்டத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் மட்டும் இன்றி தென்னிந்திய திரை உலகிலேயே அதிகமான சம்பளம் வாங்குபவர் நயன்தாரா தான் என்றும் அவருக்கு ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் வெளியான ’ஜவான்’ திரைப்படத்தில் கூட அவர் 10 கோடி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது த்ரிஷா அவரை விட அதிகமாக இரண்டு கோடி ரூபாய் அதாவது 12 கோடி ரூபாய் கமல்ஹாசன் உடன் நடிக்கும் ’தக்லைஃப்’ படத்திற்காக வாங்கி உள்ளதாக தெரிகிறது.


 
அதேபோல் இதே சம்பளம் தான் சிரஞ்சீவியுடன் நடித்து கொண்டிருக்கும் படத்திலும் த்ரிஷா வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தற்போது நயன்தாராவை விட அதிகமாக சம்பளம் வாங்குவது மட்டுமின்றி அதிகமாக படங்களில் கையில் வைத்திருக்கும் திரிஷா தான் தற்போது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் கமல்ஹாசன், அஜித், சிரஞ்சீவி, மோகன்லால், நிவின்பாலி என பல முன்னணி நடிகர்களுடன் த்ரிஷா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ’கோட்’ படத்திலும் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். எனவே த்ரிஷா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து அவர்தான் தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement