• Jan 18 2025

விஜய் மீதுள்ள கோபத்தில் கார்த்திக் சுப்புராஜ் செய்த தரமான செயல்.. சூர்யாவுக்கு அடித்த லக்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தை இயக்குவார்கள் என்று கூறப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் தான் கார்த்திக் சுப்புராஜ் என்றும் ஆனால் அவர் தற்போது சூர்யாவின் படத்தை இயக்குவதற்கு கமிட்டானதற்கு ஒரு பின்னணி உள்ளது என்றும் கூறப்படுகிறது. 

‘தளபதி 69 ’படத்திற்காக விஜய்யிடம் முதன் முதலில் கதை சொன்ன இயக்குநர் என்றால் அது கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த கதை சூப்பராக இருக்கிறது, கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று வாக்குறுதி கொடுத்த விஜய், அதன் பின்னர் வேறு சில இயக்குநர்களிடம் கதை கேட்ட நிலையில் கார்த்திக் சுப்புராஜ் பொறுமையாக விஜய்யிடம் இருந்து பாசிட்டிவ் பதில் வரும் என்று காத்திருந்தாராம். 

ஆனால் அவர் வெற்றிமாறன் அல்லது எச் வினோத் தான் தனது அடுத்த பட இயக்குனர் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்த போது தான் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. அந்த நிலையில் சமீபத்தில் விஜய்யை நேரில் பார்த்த கார்த்திக் சுப்புராஜ் தனது கதை குறித்து கருத்து கேட்க, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் சில காட்சிகள் தனக்கு செட் ஆகாது என்று கூறியதாக தெரிகிறது. 



இதை நீங்கள் ஆரம்பத்திலேயே கூறி இருந்தால் நான் மாற்றி கொண்டு வந்திருப்பேனே என்று கார்த்திக் சுப்புராஜ் கேட்க அதன் பின்னர் விஜய் ’இந்த கதை வேண்டாம், வேறொரு கதையுடன் வாருங்கள், பின்பு ஒரு நாள் பார்க்கலாம்’ என்று அவரை அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது. 

இந்த நிலையில் தான் இதே கதையை அவர் சூர்யாவிடம் கூற, சூர்யா இந்த கதையை கேட்டு ஆச்சரியமடைந்து ’இப்படி ஒரு கதையைவா விஜய் வேண்டாம் என்று சொன்னார்’ என்று கூறியதோடு ’உடனே நாம் இந்த படத்தை பண்றோம், எனது அடுத்த படமே இந்த படம் தான்’ என்று கூறினார். அது மட்டும் இன்றி ’இந்த படத்திற்காக தயாரிப்பாளர்களை தேடி அலைய வேண்டாம், நாம் இருவருமே சேர்ந்து தயாரிப்போம்’ என்று சூர்யா கூறியதை அடுத்து, கார்த்திக் சுப்புராஜூம் ஒப்புக்கொண்டார். இதை அடுத்த தான், நேற்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

மொத்தத்தில் ஒரு மிகச்சிறந்த கதையை விஜய் மிஸ் பண்ணிவிட்டார் என்றும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனால் விஜய் இடத்தை சூர்யா பிடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement