• Jan 19 2025

தாடியால இப்படியெல்லாம் அசிங்கப்பட்டாரா TR..?? வெளியான தகவல்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

80, 90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்  தான் டி.ஆர் ராஜேந்திரன். இவர் நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம், இசை, படத்தொகுப்பு என பல்வேறு துறைகளிலும் கலக்கி இருந்தார்.

தலை ராகம் என்ற படத்தில் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர், அதில் இயக்கம் மட்டும் இல்லாமல் வசனம் கேமரா இசையமைப்பு என எல்லா பக்கங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

இவரைப் போலவே இவருடைய மகன் சிம்பு சிறு வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். சிம்பு தற்போது உலக நாயகன் கமலஹாசன், பிரபல இயக்குனர் மணிரத்னம்  கூட்டணியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், டி. ராஜேந்திரன் பற்றி பேசும்போது முதலில் நினைவுக்கு வருவது அவரது தாடி தான். தற்போது அவரது தாடிக்கு பின்னால் உள்ள கதை பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, இவர் கல்லூரியில் சேரும்போது தனது தாடியை சேவ் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் அவரது உறவினர் ஒருவர் இவரது மூஞ்சிக்கு எல்லாம் சேவ் ஒரு கேடா. சும்மா இருந்தா காசும் மிச்சம் பிளேடும் மிச்சம் என சொல்லிக் கிண்டல் அடித்துள்ளார்.

இதைக் கேட்டு பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் தனது வாழ்க்கையில் வென்ற பிறகு தான் தாடியை எடுக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையில் இருந்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் சாதித்து  வெற்றி கண்டபோது எதற்கு தாடியை எடுக்க வேண்டும் என்று அப்படியே கண்டினியூ பண்ணி உள்ளாராம்.

Advertisement

Advertisement