தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் ஜ.பு. கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறார்.
அதன்படி, வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயதினமாக பலாப்பழ சின்னத்தில் களத்தில் இறங்கியுள்ளார். இந்த தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த இரண்டு நாட்கள் முன்பு தான் மன்சூர் அலிகானின் ஆதரவாளர் ஒருவரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்பட்டது.
இதையடுத்து, அவரை கைது செய்யக்கோரி சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார் மன்சூர் அலிகான்.
ஆனாலும் போலீசார் அவரின் புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சத்துவாச்சாரி போலீஸநிலையம் முன்பாக தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின்பு பொலிசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தற்போது எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தால் நாயைக் கட்டி வேலை வாங்குவது போல் வேலை வாங்கலாம் என மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
இவ்வாறு இவர் சபையில் கூறியுள்ளது பெரும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!