• Mar 29 2025

சால்வையை தூக்கி எறிந்த சிவகுமார்!"எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிட்டான்"காரணம் இதுதான்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார், பழ நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சிவகுமார், குடிநீரை காப்பதற்காக பழ. கருப்பையா முன்னெடுத்த போராட்டத்தை நினைவுகூர்ந்தார்.


அப்போது திடீரென தனது பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு மேடையில் அமர்ந்திருந்த பழ. கருப்பையாவை நோக்கி நடந்த சிவகுமார், அவரது காலில் விழுந்து வணங்கிவிட்டு, மீண்டும் வந்து தனது உரையை தொடர்ந்தார்.  இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியின் முடிவில் வயதான ரசிகர் ஒருவர் நடிகர் சிவகுமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்க வந்தார்.


அப்போது அந்த ரசிகர் போட வந்த பொன்னாடையை தடுத்த சிவகுமார், அந்த பொன்னாடையை தூக்கி வீசிவிட்டு சென்றார். இந்த செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர் செய்வதறியாது மனவேதனையடைந்தார். 


தற்போது நான் ஏன் அப்படி செய்தேன் என்றால் அவன் என் நெருங்கிய நண்பர் அவர் எனக்கு பொன்னாடை போட வேண்டிய அவசியம் இல்லை அதனாலே அதனை எறிந்தேன்.

அது பலவாறு சர்ச்சை ஆகி வருகிறது. அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement