• Mar 26 2026

திருட்டு பணத்தை கொண்டு வரும் முத்து! அவனை செருப்பால அடிக்கணும் -விஜயா!

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளைக்கான ப்ரோமோ பார்ப்போம் வாங்க.


மீனாவின் தம்பி முத்துவிடம் பணத்தை கொடுத்து அந்த விடியோவை டிலீட் செய்யுமாறு கூறி செல்கிறார். முத்து அந்த பணத்தை எடுத்து கொண்டு போய் தனது அம்மா விஜயாவிடம் கொடுத்து உங்களது பணத்தை திருடன் திருடினான் தானே அவனை போலீஸ் புடிச்சிட்டாங்களாம் பணத்தை கொடுத்தாங்க என்று கொடுக்கிறார்.

அதனை பார்த்த விஜய்யா அவனை என் கண் முன்னாடி கொண்டு வா அவனை நாலு அரை செருப்பால அடிக்கணும் என்று கூறுகிறார். எங்கடா அவன் என்று கேட்கும் போது முத்து அவன் இங்க இல்ல அவனை வேற ஜெயிலுக்கு மாத்திட்டாங்க என்று கூறுகிறார்.


முத்து அப்போது மனதில் நினைத்து கொள்கிறார். எப்படியும் எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியத்தான் போகுது ஆனா சொன்னா  மீனாவை இங்க இருக்க விடமாட்டாங்க அவன் பண்ணுன தப்புக்கு மீனா என்ன செய்வா என்று மனதில் யோசிக்கிறார் முத்து.

Advertisement

Advertisement