• Feb 22 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறவுள்ள போட்டியாளர்..இவர் தான்

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் 8வது சீசன், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக துவங்கியது. "ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு" என்ற அடைமொழிக்கேற்ப இந்த சீசனில் பல புதிய மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த சீசனில், நாம் விரும்பி பார்த்த சில பிரபலங்களும் புதுமுகங்களும் கலந்துகொண்டுள்ளனர்.


பிக்பாஸ் 8 சுமார் 50 நாட்களை நிறைவு செய்துள்ளது, ஆனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என கணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறது. இதுவரை வீட்டிலிருந்து ரவீந்தர், அர்வன், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.


இந்த வாரத்தில், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்க, யார் வெளியேறுவர் என்பதில் பரபரப்பு அதிகரித்துள்ளது.இந்த வாரம் வர்ஷினி வெங்கட் வீட்டை விட்டு வெளியேறலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ரசிகர்களின் எதிர்பார்ப்பும், போட்டியாளர்களின் செயலும் இந்த சீசனை இன்னும் விறுவிறுப்பாக மாற்றியுள்ளன. பிக்பாஸ் வீட்டில் அடுத்தவார நிகழ்வுகள் மேலும் உச்சகட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement