• Jan 18 2025

இது வேற மாதிரி இருக்கும்! கங்குவா பற்றி சிறுத்தை சிவா கூறிய அதிரடி கருத்து!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா தனது கேரியரில் அதிக பொருட்செலவில் நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இது நவம்பர் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. ஐந்து வேடங்களில் சூர்யா நடித்துள்ளதாக சொல்லபடுகிறது. கடந்த சில வாரங்களாக இந்த திரைப்படங்களின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வந்தது. 


கங்குவா 1678 இல் வாழ்ந்து நோயால் இறந்த ஒரு போர்வீரனின் கதை. இன்றைய உலகில், 16 ஆம் நூற்றாண்டின் போர்வீரனைக் கொன்ற நோயைப் பற்றி ஒரு பெண் தீவிரமாக ஆராய்ச்சி செய்கிறார் என்பது போலவே கதை அமைத்துள்ளது. கங்குவா  படத்தின் முன் விற்பனை உலகம் முழுவதும் ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தலா ரூ.1 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் சிவா இந்த படம் குறித்து பேசியுள்ளார். 


கங்குவா 38 மொழிகளில் ரிலீசாகிறது. 3D வெர்சன் வருகிறது, IMAX வெர்சன் வருகிறது. தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் ரிச் பண்ணிய போடர்களை எல்லாம் தாண்டி இது அதற்கும் மேலாக போகும். நாங்க நினைத்தது போல நடந்தால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று சிவா கூறியுள்ளார். இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. கங்குவா என்ன செய்கிறது என்று ப்ரொத்திருந்து பார்ப்போம்.  





Advertisement

Advertisement