தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சூர்யா. தனது நடிப்பு திறமை மீது உள்ள ஆர்வத்தினால் விதம்விதமான கேரக்டரில் நடிப்பதில் ஆர்வம் காட்டும் நடிகராக சூர்யா திகழ்ந்து வருகின்றார்.
இவர் நடிப்பில் வெளியான படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அதிலும் ஜோதிகா சூர்யா நடிப்பில் வெளியான பேரழகன், மற்றும் தமன்னாவுடன் நடித்த அயன் போன்ற படங்களில் இவர் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பார்.
d_i_a
இதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. அதேபோல சூரரை போற்று திரைப்படமும் நல்ல விமர்சனம் பெற்றதோடு வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது.

இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் 13 கேரக்டரில் சூர்யா நடித்துள்ளாராம். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது தான் ரொமான்ஸ் வயதை கடந்து விட்டதால் இனி ஆக்சன் படங்களில் மட்டுமே நடிப்பேன் என சூர்யா கூறியுள்ளாராம். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!