• Dec 06 2024

இந்த சீசனில் இவர்கள் வேஸ்ட்! வைல்ட் கார்ட் நுழைந்தவர்களை விமர்சிக்கும் போட்டியாளர்கள்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இந்த வருடமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, நிகழ்வுகள், சண்டைகள், உணர்ச்சிப்பூர்வ தருணங்கள் என பரபரப்பான தருணங்களை வழங்கி வருகிறது. இந்த சீசனில் நுழைந்த புதுப்புது போட்டியாளர்கள் தங்கள் தனித்தன்மையைக் காட்டியவாறே, சிலர் முன்பே இருந்த நட்பு வலயங்களை உறுதிப்படுத்தவும் சிலர் புதிய மோதல்களை உருவாக்கவும் முனைந்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது குறித்த ப்ரோமோ வீடியோவில் இந்த சீசனில் இவர்கள் வந்தது வேஸ்ட் என்று யாரை சொல்லுவீங்க எனும் கேள்விக்கு வைல்ட் கார்ட் இல் நுழைந்த அனைவருமே சிம்பலி வேஸ்ட் என கவுஸ் மேட் பதிலளித்துள்ளனர்.வீட்டிற்குள் நுழைந்ததுமே முன்பு இருந்த போட்டியாளர்களை கடுமையாக வைத்து செய்த புதிய போட்டியாளர்கள் ஜேப்பிரி ,ஜாக்குலின்,சவுண்டு மற்றும் முத்துக்குமாரின் கதைகளை கேட்டு பதிலளிக்க முடியாமல் அமைதியாய் இருந்தனர்.


மற்றும் இந்தவாரம் முதலில் 24 மணிநேர எலிமினேஷனில் வெளியேறி திரும்பி வீட்டிற்குள் நுழைந்த குட்டி பொண்ணு சாச்சினா வெளியேறுவது உறுதியாகியுள்ளதுடன் இன்றைய நாளுக்கான எபிசோட் எவ்வாறு இருக்குமென பொறுத்திருந்து பார்க்கலாம்...

Advertisement

Advertisement