• Jan 18 2025

கர்ப்பமாக இருக்கும் வித்யா! இது எங்கள் 13 வருட தவம்! வைரல் போட்டோஷூட் இதோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

கேரளாவை சேர்ந்த நடிகை வித்யா பிரதீப், பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளிநாட்டில் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே மாடல் மற்றும் நடிகையாகவேண்டும்  என்கிற கனவு இவருக்கு இருந்ததால் படித்துக்கொண்டே நடிப்பிலும் சாதித்து காட்டினார்.


விருந்தாளி திரைப்படத்தின் ஹீரோவான மைக்கிளை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் தன்னுடைய 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார் வித்யா. மைக்கில் சில படங்கள் மட்டுமே நடித்த நிலையில், தற்போது புகைப்பட கலைஞராக இருந்து வருகிறார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய காதல் மனைவிக்கு உறுதுணையாக இருந்தார். 


இதுவரை 35 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள வித்யா பிரதீப், சன் டிவியில் ஒளிபரப்பான 'நாயகி'  சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதையும் கொள்ளை கொண்டார். மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியல் வித்யா பிரதீப்புக்கு, மிகப்பெரிய ரீச்சை பெற்று தந்தது.


இவருக்கு திருமணம் ஆன தகவல், பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டின் துவக்கத்தில் தனக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என சமூக வலைதளத்தில் கணவருடன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வெளிப்படுத்தினார்.  தற்போது வித்யா பிரதீப் திருமணம் ஆகி 13 ஆண்டுகளுக்கு பின்னர், தனக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ள தகவலை அறிவித்துள்ளார். இவர் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ், வைரலாகி வருகிறது


Advertisement

Advertisement