தமிழ் சினிமாவில் இயக்குநராக, பாடலாசிரியராக, நடிகராக பன்முகம் கொண்டு திகழ்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் இறுதியாக குபேரா திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்கும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக உள்ளது. தனுஷ் நடிப்பதையும் தாண்டி இயக்குநரான தனுஷுக்கு இந்த படம் நல்ல வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இட்லி கடை படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷ் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதிலும் படம் ஒன்பது மணிக்கு ரிலீஸ் ஆகுது என்றால் 12 மணிக்கு மேலே ரிவியூஸ் வரும். ஆனால் ஒரு ரிவ்யூ 8 மணிக்கே வந்துரும். அப்படி வரும் ரிவியூஸ் எல்லாம் நம்பாதீங்க என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல இளைஞர்களுக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார் தனுஷ். அதில் அவர் கூறுகையில், என்னடா அட்வைஸ் பண்ணுறன் என்று நினைக்காதீங்க..
இளைஞர்கள் நிச்சயமா என்ன சாதிக்க விரும்புகிறோம் என்று Manifest பண்ணனும்.. அதுக்காக உழைக்கணும்.. நிச்சயமா யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.
Listen News!