• Sep 29 2025

வாழ்நாள் முழுக்க போராளியாக இருந்த என் அம்மம்மா! ராதிகாவின் மகள் கண்ணீர் பதிவு

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

1978 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருபவர் ராதிகா. இவரது நடிப்பில்  ‘ரீவால்வர் ரீட்டா’ என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.  இவர் அரசியலிலும் செயற்பட்டு வருகிறார். 

இந்த நிலையில் மறைந்த நடிகர் எம். ஆர் ராதாவின் மனைவியும் நடிகர் ராதிகாவின் தாயாரமான கீதா, உடல் நலக்குறைவால் நேற்றைய தினம் காலமானார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 86. 

ராதிகாவின் தாயாருடைய மறைவு ஒட்டுமொத்த திரைத் துறையை  சேர்ந்தவர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தற்போது அவருக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். 


எம். ஆர் ராதாவுக்கு மூன்று மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி தான் கீதா. இவருடைய மகள்கள் தான் ராதிகாவும், நிரோஷாவும்.  இரண்டாவது மனைவியான தனலட்சுமியின் மகன்தான் ராதாரவி. 

தற்போது ராதிகாவின் மகள் தனது  அம்மம்மா  உயிர் இழந்ததை  தாங்க முடியாமல் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய ஆறுதலை  தெரிவித்து வருகின்றனர்.  இதோ அந்த பதிவு,

Advertisement

Advertisement